மற்றவர்களுக்குப் புரியாதபடி வழங்குவது தீர்ப்பல்ல -
நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன்
சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன் தனது வாழ்க்கை வரலாறை ‘காலமெல்லாம் வசந்தம்’ என்னும் நூலாக எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 25.09.10 அன்று நடந்தது.
மத்திய மந்திரி ஜி.கே. வாசன் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். மூத்த வக்கீல் காந்தி, கிருஷ்ணா சுவீட்ஸ் முரளி, பெங்களூர் டெஸ்சால்ஸ் ரவி, முத்து குழுமத் தலைவர் ஞானம், சிங்கப்பூர் சேன் ஏசியா அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குநர் நாச்சியப்பன் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக வரவேற்புறையை சீனியர் வக்கீல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வழங்கினார். தலைமை தாங்கி நூலை வெளியிட்ட ஜி.கே. வாசன் பேசும்போது, “ஏ.ஆர். லட்சுமணன், ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் திறம்பட பதவி வகித்து, பல சிறப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதேபோன்று மத்திய சட்டக்குழுத் தலைவராக இருந்து பல்வேறு பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்கியுள்ளார். தற்போது முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னையில் தமிழகத்தின் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார். அவரது வாழ்க்கை வரலாறு நூல், வளரும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக இருக்கும். இலக்கியத்திலும் அவருக்குப் புலமை உண்டு. சமூக அக்கறையோடு அவரது தீர்ப்புகள் இருக்கும்” என்றார்.
கவிஞர் வைரமுத்து, தேவகி முத்தையா, ஜெம் கிரானைட் நிர்வாக இயக்குநர் வீரமணி, சாந்தகுமாரி சிவகடாட்சம் ஆகியோர் தமது பாராட்டுரைகளை வழங்கினர்.
கவிஞர் வைரமுத்து பேசும்போது,
மேலும் படிக்க:
நன்றி..!
நட்பூ - www.natpu.in
No comments:
Post a Comment