ஆட்டோக்களில் பொதுமக்கள் நிகழ்த்தும் சாகசப் பயணங்கள்
சென்னை மாநகரம் என்றாலே முதன்மையான அடையாளங்களாக மெரினா, கூவம் போன்ற இடங்கள்தான் முன்னிற்கும். அதற்கு அடுத்ததாக பரபரப்பான மனிதர்களையும், வாகன நெரிசல்களையும் கூறலாம். இத்தகைய வாகன நெரிசல்களின் முதன்மை காரணிகளாக இருப்பவை சென்னையில் எங்கும் காணப்படுகின்ற ஆட்டோக்களே. எங்கும் ஆட்டோ... எதற்கும் ஆட்டோ... காலை நேரங்களில் அவசர அவசரமாக அலுவலகங்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ஆபத்பாந்தவன் இந்த ஆட்டோக்கள். சிறிது நேர இடைவெளியில் பேருந்தை தவறவிட்டவர்களுக்கும் இந்த ஆட்டோக்கள்தான் கைகொடுக்கின்றன.
இவ்வாறு சென்னை மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட ஆட்டோக்களில் சில வில்லங்கங்களும் இருப்பதை மறுத்தற்கியலாது. மாநிலத்தில் பல இடங்களில் நடைபெறும் சிறிய விபத்திலிருந்து மிகப்பெரிய விபத்துக்கள் வரை அனைத்திற்கும் அநேகமாக இந்த ஆட்டோக்கள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஆட்டோ ஓட்டுநர்களின் அனுபவமின்மையே இதற்கு காரணம். சில ஆயிரங்களைக் கொடுத்து லைசென்சை மிக எளிதாக பெறுவதில் தொடங்கி லைசென்சே இல்லாமல் ஓட்டுவது வரை ஆட்டோக்களைக் கையாள்பவர்கள் சிலபல செப்படி வித்தைகளைக் கையாள்கிறார்கள்.
தினப்படிக்காக ஆட்டோ ஓட்டுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம். பணம் அதிகம் உள்ள ஒருவர் அதிகப்படியான ஆட்டோக்களை வாங்கி தினப்படிக்காக ஆட்டோ ஓட்டுநர்களிடம் கொடுப்பது என்பது நடைமுறையில் உள்ளது. இவர்களிடமிருந்து ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை தருவதாகச் சொல்லி, ஆட்டோக்களை வாங்கி ஓட்டுபவர்களில் சிலருக்கு முறையான லைசென்ஸ் இருக்காது. தினப்படிக்காக விடுபவருக்கு அவருக்கான பணம் முறையாக வந்துவிட்டால் போதும். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்பது அவருக்கு அவசியமில்லை. மீறி எங்காவது ஆட்டோ பிடிபட்டால் அங்கு பணம் விளையாட ஆரம்பித்துவிடும். அல்லது அரசியல்வாதிகளின் கைகள் தன்னுடைய வேலையை காட்டும். அரசியல்வாதிகளுக்கு இதனால் கிடைக்கக்கூடிய லாபம் அவர்களுடைய கட்சி பேரணிகளுக்கு ஆட்டோக்கள் இலவசமாக கிடைக்கும் என்பதே.
தற்பொழுது Free permit என்ற பெயரில் விதவைகளுக்கும் ஏழைப் பெண்களுக்கும் ஆட்டோவிற்கான உரிமம் வழங்கப்படுகிறது. இதை வைத்து ஆட்டோக்களை வாங்கும் அவர்கள் அதை தினப்படிக்காக விடுகிறார்கள். இதிலும் பல முறைகேடுகள் நடந்தவண்ணம் உள்ளது.
private auto என்ற வகையில் நகரில் ஓட்டப்படும் ஆட்டோக்களில் அதிகப்படியான தில்லுமுல்லுகள் நடைபெறுகின்றன.
மேலும் படிக்க:
தவறாமல் உங்க கருத்தை கொஞ்சம் சொன்னிங்கன்னா நாங்க எங்களோட குறைகளை திருதிப்போம், நிறைகளை Develop பண்ணிப்போம்...
No comments:
Post a Comment