சகல சீரழிவுகளுக்கும் எதிரான மாற்று என்ன என்பதைப் பற்றிய கருத்தோட்டங்களும்,நம்பிக்கைகளும் உருவாக வேண்டும் என்பதில் அக்கறையை உங்களுடன் சேர்ந்து நாங்களும் நட்புணர்வுடன் பகிர்ந்துகொள்கிறோம். திரைப்படம் உள்ளிட்ட படிப்பவர்களின் விருப்பம் சார்ந்த பல விஷயங்களை இணையத்தில் முன்வைத்திருக்கிறோம். காலம் சிலவற்றை சலிக்க வைக்கலாம். சக மனிதர்கள் மேல் அக்கறை கொண்ட மனசின் குரலாகச் செயல்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பமாக இருந்தாலும் - அதைச் சாத்தியமாக்குவது உங்களின் ஆதரவிலும் - பங்களிப்பிலும் தான் இருக்கிறது.
Thursday, September 2, 2010
இரு கரைகளாலும் கைவிடப்பட்ட திருநங்கை வித்யா....!!!
படைப்பின் ஒழுங்கில் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட சிறு பிசகலால் திரிந்த பால்பேத சிக்கலகளுக்குப் பொறுப்பு இவர்களல்ல. மீளும் கதியற்று வாழ்க்கை நதியின் சுழிகளில் சிக்கித் திணறும் இவர்களைப் பார்த்து கைவிட்ட கரைகள் இரண்டும் கைகொட்டி சிரிப்பவைகளாகின்றன.
திருநங்கை வித்யா தனது சுயமான பால் அடையாளத்தை மீட்க மேற்கொண்ட போராட்டங்களை இந்நேர்காணல் வழியாக உங்களிடம் சொல்கிறார்:
உங்கள் குடும்பச் சூழல் பற்றி சொல்லுங்கள்...
வித்யா: திருச்சி மாவட்டம் புத்தூர் அருகில் உய்யக் கொண்டான் புறநகர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்தேன். சின்னவயதில் என்னுடைய பெயர் சரவணன். எனக்கு அப்பா இருக்காங்க. ஆனால் அம்மா சிறுவயதாக இருக்கும்போதே இறந்து விட்டாங்க. நான் எனது அக்கா அரவணைப்பில் இருந்தேன். மிகவும் வறுமையில் வாடிய சூழலிலும் என் அப்பா வட்டிக்கு வாங்கி என்னை எம்.ஏ., (பட்டய மொழி) படிக்க வைத்தார். சிறுவயது முதலே அக்காவின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய அனைத்தையும் பயன்படுத்த விருப்பம் ஏற்பட்டது. பல முறை இதற்காக அடியும் கூட வாங்கியிருக்கிறேன். அப்படி இருந்தும மீண்டும் எனக்குள் பெண்மைத் தன்மைதான் இருந்தது.
ஒரு முழுமையான பெண்ணாக மாறவேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
மேலும் படிக்க கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்:
http://www.natpu.in/Pakudhikal/Nam%20Samookam/vidya.php
தவறாமல் உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment