Monday, September 27, 2010

குப்பையாகும் இந்தியா - நேரடி ரிப்போர்ட்

" குப்பைத் தொட்டியாகும் இந்தியா : நெருக்கும் மின்னணுக் கழிவு
அபாயம்
 "


natpu
            இன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அளவிடும் அடிப்படை அலகுகளில் ஒன்றாக கணினித்துறை உள்ளது. எதிர்கால இந்தியா, கணிணித்துறை உலகுக்குச் சவால்விடும் ஒன்றாகத் திகழும் என கணிக்கப்படுகிறது. அதற்கேற்ப பொறியியல் மற்றும் மருத்துவத் துறைகளின்மீது மாணவர்களுக்கு இருந்த ஆர்வம் இன்று கணினி சார்ந்த படிப்புத் துறைகளின்மீது திசை திரும்பியுள்ளது. இந்தியா, கணினித்துறையில் ஜாம்பவானாவதில் ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால் அதற்கு முன்பே இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மேற்கத்திய நாடுகளின் கணினி மற்றும் மின்னணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறத்துவங்கியுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மின்னணு சாதனங்களின் வளர்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இன்றைய மாறிவரும் மதிப்பீடுகள், நுகர்வுக் கலாசாரம் ஆகியன மின்னணு சாதனங்களை உபயோகிக்காதவர் இல்லையென்ற நிலைக்கே கொண்டு சென்றுள்ளன. உபயோகித்து தூக்கியெறியும் மின்னணு சாதனங்கள், முதலாளித்துவ மற்றும் பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன.
சாதனங்களைப் போலவே முதலாளித்துவ வர்க்கம் மக்களிடம் ஆசைகளையும் உற்பத்தி செய்கின்றது. ஆடம்பரங்களைக்கூட தேவையாக மாற்றிக்காட்ட வல்லது இன்றைய விளம்பர யுக்தி. மற்றொரு வகையில் இன்றைய கூட்டு நனவிலி மனத்தில், அதிகம் நுகர்பவன் அதிகம் வாழ்கிறான் என்றொரு கருத்து உருக்கொண்டுள்ளதெனவே கொள்ளலாம். இன்றைய மாநகர் சார்ந்த மேல்தட்டு, நடுத்தர மாணவ வர்க்கம் பாடப் புத்தகங்களுடன் தங்களுக்கென ஒரு கணினியும் படிப்புக்கு அவசியம் என்று கருதும் சூழல் உள்ளது. செல்போன் மோகம் பற்றி சொல்லவே தேவையில்லை.
நுகர்வோரைக் கணக்கில் கொண்டு உருவாகி வரும் நூற்றுக்கணக்கான மின்னணு சாதனங்கள், கணினிகளை உபயோகிப்பவர்கள், அவை பழுதுபடும்போது பழுதுநீக்குவதை விட்டு பெரும்பாலும் தூக்கியெறிந்துவிடும் சூழலே உள்ளது. இந்த யூஸ் அண்ட் த்ரோ மனோபாவம் நிறுவனங்களுக்குப் பெரும் லாபம் சம்பாதித்துக் கொடுக்கின்றன. இந்தப் பயன்படுத்தித் தூக்கியெறியும் மனோபாவம் உறவுகளிலும் வளர வெகுநாளாகாது என்பது தனியே ஆராய வேண்டிய விஷயம். ஆனால் இப்படித் தூக்கி எறியப்படும் மின்னணுக் கழிவுகள் எங்கே போகின்றன?

மேலும் தொடர: http://natpu.in/Pakudhikal/Nam%20Samookam/kuppaithotti.php

நன்றி..!
நட்பூ - இணைய இதழ்.
www.natpu.in - தமிழர்களுக்கான இணைய முகம்.

No comments:

Post a Comment