Wednesday, September 1, 2010

நடிகர் கட்சி எந்தப்பக்கம்? - நட்பூ

         தேர்தல் நெருங்க நெருங்க நடிகர் கட்சியை நோக்கிப் பலருடைய கவனமும் திரும்பி இருக்கிறது. தொடர்ந்து கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதில் உள்ள பிரச்சினைகளையும், பொருளாதாரச் சிக்கல்களையும் கட்சியில் உள்ள பலரும் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரசுடனும் இன்னும் இதரக் கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணியாகப்போட்டியிடலாமா என்கிற யோசனைகள் எல்லாம் முன்வைக்கப்பட்டாலும் - தன்னைப் பெரிதும் முன்னிலைப்படுத்தி நடிகர் கட்சியினர் பேசுவது சற்று அலர்ஜியை உண்டு பண்ணியிருக்கிறது.

அப்படி காங்கிரசுடன் இணைந்த கூட்டணி அமைந்தால் தைலம் மணக்கும் தோட்டத்துக்காரரும் தயாராக இருக்கிறாராம். இருந்தும் டெல்லித் தலைமையிடமிருந்து அதற்கான சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. சென்னையில் உள்ள தோட்டத்துத்தலைமையும் 1967ல் தி.மு.க ராஜாஜி மாதிரி மாறுபட்ட பல கட்சித்தலைவர்களுடன் இணைந்து கூட்டணியை வலுப்படுத்தியதைப் போல இப்போது அமைக்க வேண்டும் என்று நினைக்கிறதாம். அதற்காக வழக்கமான இறுக்கத்தை விட்டு இறங்கி வரவும் தயாராக இருக்கிறார்களாம். நடிகரை கூட்டணிக்குள் கொண்டுவர அந்தக்கூட்டணியில் உள்ள சிலர் வெளிப்படையாக விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். எப்படியோ தி.மு.க வை ஆட்சியை விட்டு இறக்கியே தீருவேன் என்று சபதம் போடாத குறையாக அறிவித்திருந்தாலும் - தி.மு.கவுக்கு எதிரான எந்த அணியில் சேரப் போகிறார் என்பது இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை. ஆனால் அவருக்குப் பக்கத்தில் தூண்டில்கள் தயாராக இருக்கின்றன.

மேலும் சுவரசியமான செய்திகளுக்கு: 



No comments:

Post a Comment