இஸ்லாமிய மக்கள் இன்று தமது நோன்பு பெருநாளைக் குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.
நம் நாட்டில் மட்டுமன்றி, உலகில் எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் வழ்கின்றனரோ அங்கெல்லாம்
இப்பெருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக இஸ்லாமியர்களின் மாதங்கள் யாவும் சந்திரனை மையமாகக் கொண்டே கணிக்கப்படுகிறது. நடைமுறை உலகில் நாம் சூரிய ஆண்டை பின்பற்றுவது போல முஸ்லிம்கள் சமய விடயங்களில் சந்திர ஆண்டையே பின்பற்றுகின்றனர். இதன் காரணமாகவேதான் பிறை பார்த்து நோன்பு நோற்று பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றனர்.
அதாவது றமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று சவ்வால் மாதம் முதலாவது பிறை கண்டதும் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இந்த அடிப்படையில் இஸ்லாமியர்களைப் பொருத்தவரை பிறை பார்ப்பது முக்கியமாகிறது.
இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் முஸ்லிமாக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(றமழான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை. அதே நேரம் பெருநாள் தினத்திற்கு முன் ஒரு மாதகாலம் நோன்பு நோற்பது என்பதும் சாதாரண காரியமல்ல. ஏனெனில் அதிகாலை சுமார் 4.45 மணிமுதல் மாலை சுமார் 6.15 மணிவரை ஏறத்தாழ 14 மணித்தியாலங்கள் எந்த உணவோ பானமோ உட்கொள்ளாமல் தான் நோன்பு நோற்கப்படுகிறது. உணவுத்தொகுதியில் ஒரு துளி உணவோ, ஒரு துளி நீரோ சென்றடைவதில்லை. அதுமட்டுமல்ல, அழகிய அல்லது ரசனை கொண்ட எதனையும் நோக்குவதில் இருந்து தவிர்ந்து கொள்வதும் வேண்டற்பாலது. உதாரணமாக ஒரு நடனத்தை அல்லது இச்சை தரும் எக்காட்சியையும் பர்க்காது இருப்பதும் முக்கியம். ஐம்புலன்களும் அடக்கப்படுவதே உண்மையான நோன்பு என வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள தளத்தை பார்க்கவும்.
www.natpu.in நட்பூ
hi, make five pillars bold to show that attractive
ReplyDelete