Thursday, December 9, 2010

ஸ்பெக்ட்ரம் முறைகேடு :குற்றவாளி யார்?

ஸ்பெக்ட்ரம் ஊழல் இதுவரை நாம் பேசி வந்த பல ஊழல்களை எல்லாம் ஒரேயடியாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அதிலும் மத்தியக் கணக்குத் தணிக்கைத் துறை சம்பந்தமில்லாமல் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அறிக்கையை வெளியிடுமா?

natpu

இந்த இலாகாவைப் பெறுவதற்கு தி.மு.க எவ்வளவு பாடுபட்டது என்பதையும் யாரும் மறந்துவிட முடியாது. ஒரு காலத்தில் மாநில சுயாட்சி கோரிக்கையுடன்  மத்திய அரசின் மீது பாராமுகமாக இருந்த தி.மு.க தற்போது நாட்டின் மிக உயர்ந்த ஊழலோடு தொடர்புபடுத்திப் பேசப்படுவதை எப்படிப் பார்க்க முடியும்? தேய்வதாக முழக்கமிட்ட தெற்கின் சாதனை என்றா?
கார்கில் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததும் மகாராஷ்டிர முதல்வரைப் பதவியை விட்டு விலகச்சொல்ல காங்கிரசால் முடிந்தது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவைக் குறிவைத்து முன்பு பேசப்பட்டபோது முதல்வரான கருணாநிதி பதிலுக்கு ராசா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குற்றம் சாட்டுகிறார்கள் என்கிற கண்ணீர்ப்புகைக் குண்டைத் தூக்கி வீசினார். அந்தப் புகை மூட்டத்தை எல்லாம் மீறித்தான் தி.மு.கவும் அங்கம் வகிக்கிற மத்திய அரசின் அங்கமான மத்தியக் கணக்குத் தணிக்கைத்துறை இழப்பு குறித்த புள்ளிவிபரங்களைத் தெரிவித்திருக்கிறது. 


natpu


இப்போது இவ்வளவு விஷயங்கள் வெளிவந்தபிறகும் தமிழக முதல்வர் கருணாநிதி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ராசா குற்றவாளி அல்ல என்றதோடு...


மேலும் படிக்க: http://www.natpu.in/Pakudhikal/Arasiyal/rasha.php

நன்றி - நட்பூ இணைய இதழ்..