Tuesday, September 28, 2010

பாமரனுக்கும் புரியணும் - அதுக்கு பேர்தான் தீர்ப்பு - Justice AR. Lakshmanan

மற்றவர்களுக்குப் புரியாதபடி வழங்குவது தீர்ப்பல்ல - 

நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன்



natpu

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன் தனது வாழ்க்கை வரலாறை ‘காலமெல்லாம் வசந்தம்’ என்னும் நூலாக எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 25.09.10 அன்று நடந்தது. 

மத்திய மந்திரி ஜி.கே. வாசன் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். மூத்த வக்கீல் காந்தி, கிருஷ்ணா சுவீட்ஸ் முரளி,  பெங்களூர் டெஸ்சால்ஸ் ரவி, முத்து குழுமத் தலைவர் ஞானம், சிங்கப்பூர் சேன் ஏசியா அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குநர் நாச்சியப்பன் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர். 

natpu


முன்னதாக வரவேற்புறையை சீனியர் வக்கீல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வழங்கினார். தலைமை தாங்கி நூலை வெளியிட்ட ஜி.கே. வாசன் பேசும்போது, “ஏ.ஆர். லட்சுமணன், ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் திறம்பட பதவி வகித்து, பல சிறப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதேபோன்று மத்திய சட்டக்குழுத் தலைவராக இருந்து பல்வேறு பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்கியுள்ளார். தற்போது முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னையில் தமிழகத்தின் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார். அவரது வாழ்க்கை வரலாறு நூல், வளரும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக இருக்கும். இலக்கியத்திலும் அவருக்குப் புலமை உண்டு. சமூக அக்கறையோடு அவரது தீர்ப்புகள் இருக்கும்” என்றார். 

கவிஞர் வைரமுத்து, தேவகி முத்தையா, ஜெம் கிரானைட் நிர்வாக இயக்குநர் வீரமணி, சாந்தகுமாரி சிவகடாட்சம் ஆகியோர் தமது பாராட்டுரைகளை வழங்கினர். 

கவிஞர் வைரமுத்து பேசும்போது, 

மேலும் படிக்க:

நன்றி..!

நட்பூ - www.natpu.in 

 

Monday, September 27, 2010

குப்பையாகும் இந்தியா - நேரடி ரிப்போர்ட்

" குப்பைத் தொட்டியாகும் இந்தியா : நெருக்கும் மின்னணுக் கழிவு
அபாயம்
 "


natpu
            இன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அளவிடும் அடிப்படை அலகுகளில் ஒன்றாக கணினித்துறை உள்ளது. எதிர்கால இந்தியா, கணிணித்துறை உலகுக்குச் சவால்விடும் ஒன்றாகத் திகழும் என கணிக்கப்படுகிறது. அதற்கேற்ப பொறியியல் மற்றும் மருத்துவத் துறைகளின்மீது மாணவர்களுக்கு இருந்த ஆர்வம் இன்று கணினி சார்ந்த படிப்புத் துறைகளின்மீது திசை திரும்பியுள்ளது. இந்தியா, கணினித்துறையில் ஜாம்பவானாவதில் ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால் அதற்கு முன்பே இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மேற்கத்திய நாடுகளின் கணினி மற்றும் மின்னணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறத்துவங்கியுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மின்னணு சாதனங்களின் வளர்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இன்றைய மாறிவரும் மதிப்பீடுகள், நுகர்வுக் கலாசாரம் ஆகியன மின்னணு சாதனங்களை உபயோகிக்காதவர் இல்லையென்ற நிலைக்கே கொண்டு சென்றுள்ளன. உபயோகித்து தூக்கியெறியும் மின்னணு சாதனங்கள், முதலாளித்துவ மற்றும் பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன.
சாதனங்களைப் போலவே முதலாளித்துவ வர்க்கம் மக்களிடம் ஆசைகளையும் உற்பத்தி செய்கின்றது. ஆடம்பரங்களைக்கூட தேவையாக மாற்றிக்காட்ட வல்லது இன்றைய விளம்பர யுக்தி. மற்றொரு வகையில் இன்றைய கூட்டு நனவிலி மனத்தில், அதிகம் நுகர்பவன் அதிகம் வாழ்கிறான் என்றொரு கருத்து உருக்கொண்டுள்ளதெனவே கொள்ளலாம். இன்றைய மாநகர் சார்ந்த மேல்தட்டு, நடுத்தர மாணவ வர்க்கம் பாடப் புத்தகங்களுடன் தங்களுக்கென ஒரு கணினியும் படிப்புக்கு அவசியம் என்று கருதும் சூழல் உள்ளது. செல்போன் மோகம் பற்றி சொல்லவே தேவையில்லை.
நுகர்வோரைக் கணக்கில் கொண்டு உருவாகி வரும் நூற்றுக்கணக்கான மின்னணு சாதனங்கள், கணினிகளை உபயோகிப்பவர்கள், அவை பழுதுபடும்போது பழுதுநீக்குவதை விட்டு பெரும்பாலும் தூக்கியெறிந்துவிடும் சூழலே உள்ளது. இந்த யூஸ் அண்ட் த்ரோ மனோபாவம் நிறுவனங்களுக்குப் பெரும் லாபம் சம்பாதித்துக் கொடுக்கின்றன. இந்தப் பயன்படுத்தித் தூக்கியெறியும் மனோபாவம் உறவுகளிலும் வளர வெகுநாளாகாது என்பது தனியே ஆராய வேண்டிய விஷயம். ஆனால் இப்படித் தூக்கி எறியப்படும் மின்னணுக் கழிவுகள் எங்கே போகின்றன?

மேலும் தொடர: http://natpu.in/Pakudhikal/Nam%20Samookam/kuppaithotti.php

நன்றி..!
நட்பூ - இணைய இதழ்.
www.natpu.in - தமிழர்களுக்கான இணைய முகம்.

Saturday, September 25, 2010

என்னது 5400 கோடி டாலரா?

அமெரிக்காவின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடு..



natpu


போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியீட்டுள்ள செய்தியில்,

உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து 17  ஆண்டுகளாக ....

மேலும் படிக்க: 


Friday, September 24, 2010

பொது மக்களே சாகசக்கரர்கள்....!!!!

ஆட்டோக்களில் பொதுமக்கள் நிகழ்த்தும் சாகசப் பயணங்கள்



natpu
சென்னை மாநகரம் என்றாலே முதன்மையான அடையாளங்களாக மெரினா, கூவம் போன்ற இடங்கள்தான் முன்னிற்கும். அதற்கு அடுத்ததாக பரபரப்பான மனிதர்களையும், வாகன நெரிசல்களையும் கூறலாம். இத்தகைய வாகன நெரிசல்களின் முதன்மை காரணிகளாக இருப்பவை சென்னையில் எங்கும் காணப்படுகின்ற ஆட்டோக்களே. எங்கும் ஆட்டோ... எதற்கும் ஆட்டோ... காலை நேரங்களில் அவசர அவசரமாக அலுவலகங்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ஆபத்பாந்தவன் இந்த ஆட்டோக்கள். சிறிது நேர இடைவெளியில் பேருந்தை தவறவிட்டவர்களுக்கும் இந்த ஆட்டோக்கள்தான் கைகொடுக்கின்றன.
natpuஇவ்வாறு சென்னை மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட ஆட்டோக்களில் சில வில்லங்கங்களும் இருப்பதை மறுத்தற்கியலாது. மாநிலத்தில் பல இடங்களில் நடைபெறும் சிறிய விபத்திலிருந்து மிகப்பெரிய விபத்துக்கள் வரை அனைத்திற்கும் அநேகமாக இந்த ஆட்டோக்கள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஆட்டோ ஓட்டுநர்களின் அனுபவமின்மையே இதற்கு காரணம். சில ஆயிரங்களைக் கொடுத்து லைசென்சை மிக எளிதாக பெறுவதில் தொடங்கி லைசென்சே இல்லாமல் ஓட்டுவது வரை ஆட்டோக்களைக் கையாள்பவர்கள் சிலபல செப்படி வித்தைகளைக் கையாள்கிறார்கள்.
natpuதினப்படிக்காக ஆட்டோ ஓட்டுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம். பணம் அதிகம் உள்ள ஒருவர் அதிகப்படியான ஆட்டோக்களை வாங்கி தினப்படிக்காக ஆட்டோ ஓட்டுநர்களிடம் கொடுப்பது என்பது நடைமுறையில் உள்ளது. இவர்களிடமிருந்து ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை தருவதாகச் சொல்லி, ஆட்டோக்களை வாங்கி ஓட்டுபவர்களில் சிலருக்கு முறையான லைசென்ஸ் இருக்காது. தினப்படிக்காக விடுபவருக்கு அவருக்கான பணம் முறையாக வந்துவிட்டால் போதும். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்பது அவருக்கு அவசியமில்லை. மீறி எங்காவது ஆட்டோ பிடிபட்டால் அங்கு பணம் விளையாட ஆரம்பித்துவிடும். அல்லது அரசியல்வாதிகளின் கைகள் தன்னுடைய வேலையை காட்டும். அரசியல்வாதிகளுக்கு இதனால் கிடைக்கக்கூடிய லாபம் அவர்களுடைய கட்சி பேரணிகளுக்கு ஆட்டோக்கள் இலவசமாக கிடைக்கும் என்பதே.
தற்பொழுது Free permit என்ற பெயரில் விதவைகளுக்கும் ஏழைப் பெண்களுக்கும் ஆட்டோவிற்கான உரிமம் வழங்கப்படுகிறது. இதை வைத்து ஆட்டோக்களை வாங்கும் அவர்கள் அதை தினப்படிக்காக விடுகிறார்கள். இதிலும் பல முறைகேடுகள் நடந்தவண்ணம் உள்ளது.
natpuprivate auto என்ற வகையில் நகரில் ஓட்டப்படும் ஆட்டோக்களில் அதிகப்படியான தில்லுமுல்லுகள் நடைபெறுகின்றன. 










மேலும் படிக்க: 

தவறாமல் உங்க கருத்தை கொஞ்சம் சொன்னிங்கன்னா நாங்க எங்களோட குறைகளை திருதிப்போம், நிறைகளை Develop பண்ணிப்போம்...


Thursday, September 23, 2010

' மடையர்கள், இந்த மனிதர்கள்தான்…..’




வாத்து மடையன் - சிறுகதை 



“அக்கா வாத்து………. தங்கை வாத்து………….’ என்ற இரண்டு வாத்துகள் ஒரு குட்டைக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.
குட்டிகுட்டியான சில மீன்களும், கொசு முட்டைகளும்தான் அவற்றுக்கு உணவாகக் கிடைத்தன. பிளாஸ்டிக் கவர்களில் படர்ந்திருக்கும் அழுக்குகள் என்றால், தங்கை வாத்துக்கு கொண்டாட்டம்தான்! ஆனால், இது அக்கா வாத்துக்கு சுத்தமாக பிடிக்காது.

”நீ செய்வது தவறு. மடமனிதனைப் போலவே இருக்கிறாயே………?! சாப்பிடும்போது பிளாஸ்டிக் கவரின் சிறு பகுதி உன் வயிற்றுக்குள் போனால்கூட மரணம் நிச்சயம்’’ என்று எச்சரித்தது அக்கா வாத்து.
”மடமனிதன் என்று என்னைச் சொல்கிறாயே……?! மனிதர்கள்தானே “வாத்து மடையன்’ என நம்மை வைத்து அவர்களாகவே சொல்லிக் கொள்வார்கள்?’” என்று சற்று கோபமாகக் கேட்டது தங்கை வாத்து.
natpu
”மடையர்கள், இந்த மனிதர்கள்தான்…..’ என நீ சொல்லும்போது எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. இந்தக் கதையை நான் சிறு வயதாக இருக்கும்போது நம் பாட்டி வாத்து எனக்குச் சொன்னது’’ என்றது அக்கா வாத்து.
”அப்படியா………?! நம் பாட்டி சொன்ன கதையா…?! சீக்கிரமாகச் சொல்லு’’ என்று ஆர்வமானது தங்கை வாத்து.
”ஒரு ஊரில் ஒரு மனிதன் இருந்தான். வீட்டில் பல வாத்துகளை வளர்த்து வந்தான். அதில் பொன் நிறத்தில் ஒரு வாத்து இருந்தது. இந்த வாத்து நீரில் நீந்தும்போது சூரியக்கதிர்கள் அதன் இறகுகளில் பட்டுத் தெறித்து பளபளக்கும்.
அவனிடம் பல தவறான பழக்கங்கள் இருந்தன. அதில் ஒன்று கஞ்சத்தனம்! நம் வாத்துக் கூட்டத்துக்கு சரியாக உணவே கொடுக்க மாட்டான். எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலக்காரன். இந்த மனிதனைத் திருத்துவதற்காக மற்ற தோழர்களோடு சேர்ந்து பொன் நிற வாத்து ஒரு திட்டம் தீட்டியது. திட்டப்படி, பொன் நிற வாத்து முட்டைகளைப் பளபளப்பாக பொன் நிறத்தில் இட்டது.
natpuஅந்த முட்டைகளை விற்று நிறைய லாபம் பார்த்தான். அந்த லாபத்தில் நன்றாகத் தின்று அவன் கொழுத்தே போய்விட்டான். அப்போதும் வாத்துகளுக்கு நன்றாக உணவு கொடுக்க வேண்டும் என்று அவன் நினைக்கவே இல்லை. இந்த நிலையில், ஒரு நாள் பேராசைப்பட்டு பொன் நிற வாத்தின் வயிற்றில் நிறைய முட்டைகள் இருக்கும் என எண்ணி அந்த வாத்தின் வயிற்றைக் கிழித்தான். அவனது பேராசையால் அந்த வாத்து இறந்ததுதான் மிச்சம்! இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அவன் திருந்தினான். பேராசைப்படுவதால் யாருக்கும் லாபமில்லை என்பதை உணர்ந்தான். பின்னர் ஏனைய வாத்துகளை நன்றாகப் பராமரித்தான்’’ என்று கதையைச் சொல்லி முடித்தது அக்கா வாத்து.
”அக்கா, இப்போது நினைத்தாலும் வருத்தமாக உள்ளது. அந்தப் பொன் நிற வாத்து எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறது’’ என்று உணர்ச்சிவசப்பட்டது தங்கை வாத்து.
”இது போன்ற அறிவில்லாத செயல்களில் ஈடுபடுபவர்களைத்தான் வாத்து மடையன் என மனிதர்கள் அழைக்கிறார்கள்’’ என்றது அக்கா வாத்து.
natpu
”சரி. வாத்தை கொன்ற அந்த மனிதனுக்கு ஏதாவது தண்டனை கிடைத்ததா……?! என்றது தங்கை வாத்து.
”அந்த மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் சேர்த்து நாம் ஒரு தண்டனையை வழங்கி இருக்கிறோமே……… அதாவது, நாம் முட்டையை அடைகாத்து குஞ்சுகள் பொறிப்பதையே விட்டுவிட்டோம். நம் முட்டைகளை கோழிகளின் முட்டைகளோடு வைத்து அவற்றை ஏமாற்றித்தான் மனிதர்கள் வாத்துக் குஞ்சுகளைப் பெறுகிறார்கள். இதில் கோழிகளுக்கு இருக்கும் பெருந்தன்மையையும் மனிதர்கள் அறியமாட்டார்கள்’’ என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டது அக்கா வாத்து.



மேலும் படிக்க: www.natpu.in

நன்றி நட்பூ - இணைய இதழ்

Wednesday, September 22, 2010

' தமிழகம் முழுவதும் எனது வீடு : எனது குடும்பம்தான் '' - முதல்வர் கருணாநிதி

நறுக் செய்தி...!?







தமிழகம் முழுவதும் எனது வீடு : எனது குடும்பம்தான் '' - முதல்வர் கருணாநிதி


?
?

?
?
?


''நீங்களே உணர்ந்து சொல்லும்போது யாரும் மறுக்க முடியும்ங்களா?' வாழ்க குடும்ப உணர்வு''.




நன்றி..!

இந்து (சிவன்) கோவில்களில் இதெல்லாம் கூடாதாம்...!!!!



சிவாலயங்களில் இதையெல்லாம் செய்யகூடாதுங்க.... (பெரியவங்க சொல்றாங்க)



natpu

அக்காலத்தில் (அதாவது திரை போட்டிருக்கும் நேரம், கதவு சாத்தப்பட்ட பிறகு) தரிசனம் செய்தல், நெற்றிக்கு விபூதி இடாமல் செல்லல், செருப்புக் காலுடன் செல்லுதல், கோபுரம், விமானம், தெய்வமூர்த்திகள் ஆகியவற்றின் நிழலைத் தாண்டுதல், வாஹனத்தில் செல்லுதல், ஆண்கள் உடலின் மேல் பாகத்தை மூடிச்செல்லுதல், தலைமுடியை பின்னால் அவிழ்த்துத் தொங்கவிடுதல், தலைமுடியைக் காயவைத்தல், மூக்குச் சிந்துதல், தும்முதல், கோட்டுவாய் விடுதல், வாயில் எதையாவது மென்னுதல், பேசுதல், வேகமாகச் சுற்றுதல், தீபம் அணையும் படி மூச்சுவிடுதல், வாயால் ஊதி அணைத்தல்,


வாங்க பார்ப்போம்: 



Monday, September 20, 2010

அம்மாவின் துணிச்சல்...

மதுரை கூட்டத்தில் திட்டமிட்டபடி கலந்து கொள்வேன் : ஜெயலலிதா


அ.தி.மு.க பொதுச்செயலாளரான ஜெயலலிதா அவர்கள்  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  '' எனக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லை.  1991லிருந்து...
மேலும் படிக்க: 

Thursday, September 16, 2010

மகனின் பொய்யும் : நவீன உலகத்து தாயும் - நட்பூ

சிறுகதை:

natpu


தன் மகன் மணிகண்டன் ஒரு ஒரு இளம் பெண்ணுடன் சேர்ந்து தங்கியிருப்பதில் அவனுடைய தாயாருக்கு விருப்பம் இல்லை.
இரண்டு பிள்ளைகளில் அவன் மூத்தவன். காலதேவன் கருணையின்றி அந்தத் தாய்க்கு விதைவைக் கோலத்தைக் கொடுத்திருந்தான். மகனைக் கண்டித்துச் சொல்லவும் முடியவில்லை.
பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகன் தன் நிறுவனத்தின் அருகே அடுக்குக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு குடியிருந்தான். அதோடு அதன் மாத வாடகையான ரூ.15,000 த்தை பங்கிட்டுக் கொள்ளும் முகமாகத் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருத்தியையும் தங்குவதற்கு அனுமதித்திருந்தான்.
பிரச்சினை, அவள் மிகவும் அழகானவள். அதோடு நவீன உலகத்து மங்கை!
தாய்க்குக் கவலையாக இருந்தது. சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று பெங்களூருக்கு வந்த தாய், 2 நாட்கள் தங்கினார்.
வீட்டில் இருந்த இரண்டு அறைகளில் ஆளுக்கொரு அறையில் அந்தப் பெண்ணும் மணிகண்டனும் தனிதனியாகத் தங்கியிருந்தார்கள். நடுவில் இருந்த வரவேற்பு அறையையும், சமையல் அறையையும் மட்டும் பொதுப் புழக்கத்தில் வைத்திருந்தார்கள். தாய் வந்திருந்த
சமயத்தில் பவ்வியமாக நடந்து கொண்டார்கள்.
ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள். அந்தப் பெண்ணின் உடைகளும், பேச்சும், தாயின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆனாலும் உண்மையான நிலவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை!. மகனிடம் கேட்பதற்குத் தயக்கம்.
தன் தாயின் சந்தேகத்தை உணர்ந்த மகன், தாயிடம்,"அம்மா, என்னை நம்பு. கவிதா என்னுடைய ரூம்மேட் மட்டும்தான். வேறு எந்தவிதமான உறவும் எங்களுக்குள் இல்லை!" என்று சொன்னதோடு, இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பிய தாயாரை வழியனுப்பியும்
வைத்தான்.
ஒருவாரம் சென்றது.
ஒரு நாள் காலை, கவிதா, மணிகண்டனிடம், ஒரு குற்றச் சாட்டை வைத்தாள். தன் அறையில் இருந்த வெள்ளித் தட்டைக் காணவில்லை என்றாள். அதோடு அந்தத் தட்டு, அவன் தாயார் வந்து செல்லும் முன்புவரை இருந்தது என்றாள்.
மணிகண்டன் பதறி விட்டான். இருந்தாலும் அது பற்றித் தன் தாயாரிடம் விசாரிப்போம் என்று தன் தாய்க்குக் கடிதமும் எழுதினான்.

தாய்க்கு அவன் ஒரு கடிதம் கீழே உள்ளது!
-------------------------------------------------------------------------------------------
அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு,
வெள்ளித்தட்டு ஒன்றைக் காணவில்லை. அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போனீர்கள் என்று நான் சொல்லவில்லை.
அதேபோல அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போகவில்லை என்று சொல்லவும் தயக்கமாக உள்ளது,
உண்மை என்று ஒன்று இருக்கிறது தாயே!
நீங்கள் இங்கே வந்து சென்றதில் இருந்துதான் அதைக் காணவில்லை!
இப்படிக்கு
அன்பு மகன்
மணிகண்டன்
-------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்குப் பிறகு, மணிகண்டனின் தாயாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது!
-------------------------------------------------------------------------------------------
அன்பு மகனுக்கு,
கவிதாவுடன் நீ நெருங்கிப் பழகுகிறாய் என்று நான் சொல்லவில்லை
அதேபோல நெருங்கிப் பழகவில்லை என்றும் சொல்லவும் தயக்கமாக உள்ளது,
உண்மை என்று ஒன்று இருக்கிறது மகனே!
கவிதா தன்னுடைய அறையில் தன் சொந்தக் கட்டிலில் படுத்துத் தூங்குபவளாக இருந்திருந்தால், தலையணைக்கு அடியில் இருக்கும் வெள்ளித்தட்டு அவள் கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும்!
அன்புடன்,
உனது தாய்!
-----------------------------------------------------------------------------------------
நீதி: தாயிடம் பொய் சொல்லாதீர்கள்
அதிலும் அவள் இந்தியத் தாயாக இருந்தால் நிச்சயம் பொய் சொல்லாதீர்கள்
படித்ததில் பிடித்தது

மேலும் படிக்க : www.natpu.in 

எதுக்கு இந்த (முட்டை) அறிவிப்பு....? - நட்பூ - www.natpu.in






வாரத்தில் ஐந்து நாட்களும் சத்துணவுடன் முட்டை வழங்கப்படும் - செய்தி



''தொடர்ந்து வர்ற அறிவிப்புகளைப்  பார்த்தா
தேர்தல் நெருங்கிடுச்சு போலிருக்கே!''


மேலும் பார்க்க கீழே உள்ள தளத்தை  பார்க்கவும்:


www.natpu.in 

Monday, September 13, 2010

ஏர் பேக்கின் அவசியம்....!!!! - சிறுகதை


நெடுஞ்சாலையில் கார் ஒன்று விரைந்து கொண்டிருந்தது. தம்பதியர் பயணித்துக் கொண்டிருந்தார்கள். மனைவிதான் காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று திரும்பி அமர்ந்த கணவன், அவளைப் பார்த்துப் பேசத் துவங்கினான்.
"திருமணமாகி இருபது ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். இருந்தாலும் எனக்கு விவாகரத்து வேண்டும்."
மனைவி பதில் ஒன்றும் சொல்லவில்லை! சாலையைப் பார்த்து வண்டியைக் கவனமாக ஓட்டிக் கொண்டிருந்தாள்.
காரின் வேகத்தை அதிகப் படுத்தினாள். இப்போது மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி செல்ல ஆரம்பித்தது.
கணவன் மேலும் சொல்ல ஆரம்பித்தான்," இது சம்பந்தமாக உன்னுடைய வாதங்கள் எதையும் நான் கேட்க விரும்பவில்லை! ஏனென்றால் உன்னுடைய மிகச் சிறந்த தோழியுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அவள் உன்னைவிட புத்திசாலி,
அதோடு நேசம் மிக்கவள். காதலில் ஈடுபடத் தெரிந்தவள்.குறிப்பாகச் சொன்னால் உன்னைவிட எல்லா வகையிலும் அவள் சிறந்தவள்"
இதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் அவள் இருந்தாள். ஆனால் காரின் ஸ்டீரிங் வீலைக் கெட்டியகப் பிடித்துக் கொண்டு வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினாள் இப்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி செல்ல ஆரம்பித்தது.
அவளுடைய மனநிலையைப் பற்றிக் கவலைப் படாமல் கணவன் தொடர்ந்து பேசினான்.
"வீட்டை நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன்"
வண்டி 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டது.
"நீ ஆசையாக ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த பென்ஸ் காரையும் நான் எடுத்துக் கோள்ளப்போகிறேன்'
வண்டி 110 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டது.
அவன் மேலும் சொன்னான்,"வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன். நான் வாங்கிக் கொடுத்த கிரிடிட் கார்டு, சொகுசுப் படகு - இவைகளையும் நீ தந்து விட வேண்டும்"
கார் வேகம் பிடித்து எதிரே தெரிந்த ஒரு காங்க்ரீட் பாலத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
நர்வசாகி விட்ட கணவன் மெதுவாகக் கேட்டான்," உனக்கு வேண்டியது ஏதாவது இருக்கிறதா? கேள்!"
இதுவரை பேசாமல் வண்டி ஓட்டிக் கோண்டிருந்த மனைவி, உறுதியான, கட்டுப்படுத்தப்பட்ட குரலில் சொன்னாள்."இல்லை, எனக்குத் தேவையானது எல்லாம் என்னிடம் இருக்கிறது!"
கணவன் குறுகுறுப்புடன் கேட்டான்: "ஓ, உண்மையாகவா? என்ன வைத்திருக்கிறாய் அப்படி?"
130 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை வலது பக்கம் ஒடித்துக் கொண்டு போய்ப் பாலத்தின் காங்க்ரீட் சுவற்றின் மீது பலமாக மோதினாள் அவள். மோதும் முன்பு, அவள் தன் கணவனைப் பார்த்து, புன்னகையுடன் தன்னிடம் என்ன இருக்கிறது
என்பதை இப்படிச் சொன்னாள்:
(முற்றும்)
-----------------------------------------------------------------------------------
எததனை மோசமான விபத்திலும் ஆளைக் காப்பாற்றக் கூடிய ஏர்பேக் என்னும் கவசம் அணிந்திருப்பதைத்தான் சுருக்கமாக அப்படிச் சொன்னாள்.

Friday, September 10, 2010

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் -நட்பூ

இஸ்லாமிய மக்கள் இன்று தமது நோன்பு பெருநாளைக் குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.
நம் நாட்டில் மட்டுமன்றி, உலகில் எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் வழ்கின்றனரோ அங்கெல்லாம் 
இப்பெருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக இஸ்லாமியர்களின் மாதங்கள் யாவும் சந்திரனை மையமாகக் கொண்டே கணிக்கப்படுகிறது. நடைமுறை உலகில் நாம் சூரிய ஆண்டை பின்பற்றுவது போல முஸ்லிம்கள் சமய விடயங்களில் சந்திர ஆண்டையே பின்பற்றுகின்றனர். இதன் காரணமாகவேதான் பிறை பார்த்து நோன்பு நோற்று பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றனர். 

அதாவது றமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று சவ்வால் மாதம் முதலாவது பிறை கண்டதும் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இந்த அடிப்படையில் இஸ்லாமியர்களைப் பொருத்தவரை பிறை பார்ப்பது முக்கியமாகிறது. 

natpu
இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் முஸ்லிமாக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(றமழான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை. அதே நேரம் பெருநாள் தினத்திற்கு முன் ஒரு மாதகாலம் நோன்பு நோற்பது என்பதும் சாதாரண காரியமல்ல. ஏனெனில் அதிகாலை சுமார் 4.45 மணிமுதல் மாலை சுமார் 6.15 மணிவரை ஏறத்தாழ 14 மணித்தியாலங்கள் எந்த உணவோ பானமோ உட்கொள்ளாமல் தான் நோன்பு நோற்கப்படுகிறது. உணவுத்தொகுதியில் ஒரு துளி உணவோ, ஒரு துளி நீரோ சென்றடைவதில்லை. அதுமட்டுமல்ல, அழகிய அல்லது ரசனை கொண்ட எதனையும் நோக்குவதில் இருந்து தவிர்ந்து கொள்வதும் வேண்டற்பாலது. உதாரணமாக ஒரு நடனத்தை அல்லது இச்சை தரும் எக்காட்சியையும் பர்க்காது இருப்பதும் முக்கியம். ஐம்புலன்களும் அடக்கப்படுவதே உண்மையான நோன்பு என வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள தளத்தை பார்க்கவும்.
www.natpu.in நட்பூ 



Tuesday, September 7, 2010

சினிமா வாய்ப்பு கிடைத்தால் ஒகே, கிடைக்கலைனா....!!!!!!!!!???

 - நடிகர் திரு. பாக்யராஜ்...!!





சென்னையில் 'தா' என்ற படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா நேற்று நடந்தது. குறுந்தகட்டை வெளியிட்ட இயக்குநரான பாக்யராஜ் நிகழ்ச்சியில் பேசும்போது ''சென்னைக்குச் சினிமா ஆசையில் ஓடிவந்த எல்லோருக்கும் சினிமா வாய்ப்புக் கிடைப்பதில்லை. இவர்கள் சென்னையில் ஒரு முகவரி கூட இல்லாமல் அலைந்து திரிவார்கள்.அப்படி வாய்ப்புக் கிடைக்காதவர்களின் கடைசி முகவரி கண்ணம்மா பேட்டை சுடுகாடு தான் '' என்று பேசியிருக்கிறார்.

மேலும் பல சுவாரசியமான செய்திகளுக்கு பார்க்கவும்,

Monday, September 6, 2010

இன்றைய சிலேட்டுக் கிறுக்கல்...!!!

இன்றைய சிலேட்டுக் கிறுக்கல்...
natpu

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியல் சட்டத்தை 
உருவாக்கியவர்கள் மக்கள் எப்படி வாக்குரிமை வழங்கலாம் என்று தான் யோசித்திருப்பார்கள். 


அந்த வாக்குரிமையும் சீக்கிரம் விலை பேசப்படும் பொருளாகி விடும் என்று யோசித்திருப்பார்களா? ஜனநாயகத்தின் அர்த்தம் எப்படியெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது...!!!?


மேலும் சுவாரசியமான செய்திகளுக்கு பார்க்கவும்:


www.natpu.in
www.cinema.natpu.in



Sunday, September 5, 2010

பலே பாண்டியா - திரை விமர்சனம்



இன்னும் கருப்பு வெள்ளைப்பதிவாக நினைவில் அழியாமல் மீந்திருக்கும் அந்தக்கால “பலே பாண்டியா'' படத்தில் இருந்து ஒரு கருவை எடுத்து நவீனக்கலவை கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
உயிரைப்போக்கிக்கொள்ள விரும்பும் ஒருவன் தன்னைக் கொல்லச்சொல்லி அதற்குப் பணத்தையும் ஒரு தாதாவிடம் கொடுக்கும்போது - தாதாவுக்கு அவன் மீது பரிவும், அக்கறையும் வருகிறது. ஆனாலும் அவனைக்கொல்ல ஒரு நாளைக்குறித்து செலவுக்குக் கணிசமான பணமும் தருகிறார் தாதா. பணம் கைக்கு வந்து அதைச் செலவழிக்கத் துவங்கியதும் உறவுகளில் இருந்த வெறுப்பு மாறுகிறது. காதல் துளிர்க்கிறது. சுற்றியிருந்த உலகத்தின்மீது நம்பிக்கை பிறக்கிறது. 


காதலியுடன் அந்த தாதாவைப்பார்க்க வரும்போது - அந்த தாதா சுடப்பட்டிருக்கிறார். இதுவரை கலகலப்பாகப் போக திரைக்கதை அதற்குப் பிறகு தத்தளிக்கிறது. அந்த தாதாவைக் கொன்றவர்களையும், தன்னுடைய காதலியைக் கடத்த முயன்றவர்களையும் கடைசியில் தீர்த்துக்கட்டுவதுதான் கதை.
பிறந்ததிலிருந்து தான் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் பிரச்சினையாக ஏதோ சில சம்பவங்கள் நடந்து கொண்டே இருப்பதாகவும், தற்கொலை முயற்சியில் கூடத்தோற்றுவிட்டதாகவும் சொல்லும் போதும் இவ்வளவுதூரம் மிகைப்படுத்த வேண்டுமா என்கிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதோடு அபத்தமாவும் இருக்கின்றன. 

வெண்ணிலா கபடிக்குழுவில் கதாநாயகனாக நடித்த விஷ்ணுதான் இதிலும் கதாநாயகன். படத்தில் ரசிக்கத்தக்க சில காட்சிகள் இருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்குக் காதலியைத் தேடி வரும் கதாபாத்திரம் விவேக்கிற்கு. கழிவறைக்கு இரண்டு ரூபாய் கேட்டதற்கு ''ஒரு ரூபாய்க்கு முன்னாடி லோடு இறக்க அரிசி கொடுக்கிறாங்க. பின்லோடை இறக்க இரண்டு ரூபாயா?' என்று விவேக் கேட்கும் காட்சியில் அரங்கில் கரகோஷம். 

'பலே பாண்டியா'வில் சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் பிரமாதப்படுத்திய ''நீயே உனக்கு என்றும் நிகரானவன்'' பாட்டின் சாயலில் இதிலும் ஒரு பாடல். அதைவிட பல பின்னணிப்பாடகர்கள் தோன்றிப்பாடும் 'ஹேப்பி' பாடல் கேட்பதற்கு இனிமை. இசை -புதியவரான தேவன் ஏகாம்பரம். 
பழைய சத்யராஜ் பாணியில் மொட்டையடித்த தலையுடன் எப்போதும் முறைத்தபடி இயந்திரத்தைப் போல சண்டை போடும் 'கச்சிதம்' ஆக வரும் வில்லன், இடையிடையே வரும் சில கவர்ச்சி நடனங்கள், எப்போதும் கத்திப்பேசும் காவல் துறை அதிகாரிகள், எப்போதும் சுற்றிலும் குறைந்தபட்சத்துணியணிந்த பெண்களுடன் இருக்கும் அரசியல்வாதி பாத்திரம் - என்று பல காட்சிகளில் செயற்கைத்தனம்.



மிகக் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்டு குறிப்பிடத்தக்க வெற்றியைப்பெற்ற கறுப்பு வெள்ளைப் படத்தோடு ஒப்பிட்டால் - தலைப்பைத் தவிரப் பெரிதாக ஒன்றும் தேராவிட்டாலும் படத்தின் விரைவுக்காகக் குறைந்தபட்சம் ஓடலாம்.





மேலும் சுவாரசியமான செய்திகளுக்கு கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.


www.cinema.natpu.in


www.natpu.in


தவறாமல் உங்கள் கருத்துக்களை (பின்னூட்டங்களை) பதிவு செய்யவும்..

Friday, September 3, 2010

கிருஷ்ணனே – உலகத்தின் முதல் கம்யூனிஸ்ட்


கிருஷ்ணன் போர்க்களத்தின் நடுவில் சிரித்துக் கொண்டே நிற்கிறான். குருசேத்ர களம். பல்லாயிரக்கணக்கில் யானைப் படைகள், குதிரைப்படைகள், தேர்ப்படைகள் மற்றும் காலாட் படைகள் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்குவதற்காக பல்வகை சங்குகள் முழங்கத் தொடங்குகின்றன. கிருஷ்ணனின் கையில் பாஞ்ச சன்யம் என்னும் அற்புத சங்கு (கிருஷ்ணன் வாயில் வைத்து ஊதும் சங்காக நாம் பிறந்திருக்கக் கூடாதா என கோபியர்கள் ஏங்கி விரகத்தில் தவித்தது தனிக்கதை) இருக்கிறது. கிருஷ்ணனும் யுத்தத்திற்கு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கும்பொருட்டு பாஞ்ச சன்யம் என்னும் அந்த அற்புதச் சங்கை எடுத்து அவனது பவளவாயில் பொருத்தி ஊதுகிறான். பல போர்களில் திறமையாக யுத்தம் செய்த அர்ஜுனன் எதிர்படையினரை பார்க்கிறான். பதட்டத்தால் நடுங்கி அவனது கையிலிருந்த காண்டீபம் நழுவி கீழே விழுகிறது. அவனது கால்களில் மயிர்கள் குத்திட்டு வியர்வை அரும்புகிறது. மனக்கிலேசமடைந்து அவனது உடலில் திடீரென ஒருவித அரிப்பு தோன்றுகிறது. அவனுக்கு ஏற்பட்ட இந்த பதட்டம் போர்பயத்தால் ஏற்பட்டது அல்ல. அர்ஜுனன் பல போர்களில் பலரை வெட்டிச் சாய்த்தவன். பின் ஏன் இந்த பதட்டம் அவனுக்கு? காரணம் – எதிர்படையில் நிற்பவர்களைப் பார்க்கிறான். அங்கே அவனோடு இளம் வயதில் பழகி வாழ்ந்த விளையாட்டுத் தோழர்கள், மாமன்கள், மதிப்புமிக்க பீஷ்மர், பங்காளிகள், உடன்பிறவாச் சகோதர சொந்த பந்தங்கள், மைத்துனர்கள் எல்லோரும் அணிவகுத்து நிற்கிறார்கள். அப்பொழுது அர்ஜுனன் தனக்குள் நினைக்கிறான் – ‘ரத்தத் தொடர்புடைய உறவுகளையும், சொந்த பந்தங்களையும் போரில் வெட்டிச் சாய்த்துவிட்டு ராஜ்ஜியத்தை அடைவதால் என்ன பயன்?’


மேலும் அர்ஜுனன் நினைக்கிறான் – ‘இந்த சொந்த பந்தங்களை போரில் கொன்றுவிட்டால் அவர்கள் வீட்டுப்பெண்கள் பாதிக்கப்படுவதோடு, அடுத்தடுத்த தமது தலைமுறைகளில் பிறக்கும் குழந்தைகள் வர்ணக் கலப்புடையவர்களாக இருப்பார்களே!’
இத்தகைய குழப்பங்களில் சிக்கியிருக்கும் அர்ஜுனனுக்கு, தெளிவை உண்டாக்குவதற்காக பற்று, உறவு, ரத்த சொந்தம் இதெல்லாம் வெறும் மாயை எனவும், பிரபஞ்ச இயக்கம் எனும் மேடையில் நடிக்கப்படும் தற்காலிக நாடகம்தான் இந்த வாழ்க்கை எனவும் அவனுக்கு தொடர்ந்து உபதேசிக்கும்விதமாக கிருஷ்ணன் பதினெட்டு அத்தியாயங்களில் பிறப்பு, இறப்பு, ஆன்மா, மோட்சம், கர்ம பலன், தியானம், பக்தி, கடவுள் தன்மையின் வெவ்வேறு ரூபங்கள், அடையும் மார்க்கங்கள் என அழகழகான கவிதைகளில் விவரித்துச் சொன்னவை இன்றைய ஐன்ஸ்டீன் முதல் அப்துல்கலாம் வரையிலான அறிவியல் அறிஞர்களுக்கும் கடவுள் தேடல் கொண்டவர்களுக்கும் வழிகாட்டி அழைத்துச் செல்லும் சாரதியாகத் திகழ்கிறது.
கிருஷ்ணன் கீதையில் சொல்லியிருக்கும் பல புரட்சிகரமான கருத்துக்களையே, பிற்காலத்தில் வந்த சமூக சீர்திருத்தவாதிகளும், புரட்சிக்காரர்களும் இந்நாள்வரை பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் நான் அவதரித்து வருவேன் – அநீதிக்கு எதிராக மாபெரும் பிரகடனத்தை அறிவித்த முதல் போராளியாக கிருஷ்ணனே திகழ்கிறான். மேலும் கிருஷ்ணன், சிரத்தையற்று மனம்போன போக்கில் செய்யப்படும் தூய்மையற்ற யாகங்கள் இவற்றை தீவிரமாக எதிர்ப்பவனாகி கீதையின் வழியே பேசுபவனாக இருக்கிறான். அதுபோல எந்தவித பக்தியுமற்று தமது ஆடம்பரத்தையும், செல்வாக்கையும் வெளிக்காட்டுவதற்காகச் செய்யும் யாகங்களையும் கிருஷ்ணன் தீவிரமான விமர்சனத்துக்கு உட்படுத்துகிறான். தற்காலத்தில்கூட யாகங்களில் பங்கேற்கும் பிராமணர்கள் பக்தி சிரத்தை எதுவுமற்று ஆளோடு ஆளாக அவர்களும் சேர்ந்துகொண்டு ‘ஸ்வாஹா’ என்று கோஷ்டிகானம் மட்டும் பாடிவிட்டு அன்றைய நாளுக்கான (daily wage) கூலியை மட்டும் வாங்கி வருகிறவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சில பிராமணர்கள் யாக குண்டத்தைச் சுற்றிலும் அமர்ந்து கொள்ளும்போது அவர்கள் குந்துவதற்கு மரப்பலகை ஆசனம் ஒரு சிலருக்கு வழங்காவிட்டால் அவர்கள் அதை கௌரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு யாகம் முடியும்வரை ‘உம்’மென்று மூஞ்சியை வைத்திருப்பார்கள். அவர்கள் அக்னிக்குண்டத்தில் இடும் சிரத்தையற்ற அவிசை தேவதைகள் எப்படி மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள்? இதைத்தான் கிருஷ்ணர் ‘சிரத்தையற்ற யாகம்’ என்று விமர்சனம் செய்கிறார்.
மேலும் கிருஷ்ணர் இன்னொரு சுலோகத்தில் சொல்கிறார் – யாகத்தால் மகிழ்ந்த தேவதைகள் அமிர்தத்தை வழங்குவார்கள். சில வரங்களையும் அருள்வார்கள். அதை பிறருக்கு கொடுக்காமல் தான் மட்டுமே எடுத்துக் கொள்பவன் திருடன்- கிடைப்பவற்றை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பதுக்குபவனை திருடன் என்றும் சொன்ன உலகத்தின் முதல் கம்யூனிஸ்ட் கிருஷ்ண பரமாத்மாதான். அதற்குப் பிறகு ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்கள் கழித்து காரல்மார்க்சும் ஏங்கல்சும் இதே கருத்தை அப்படியே சொல்கிறார்கள். பொதுவுடமை சித்தாந்தம் தோன்ற முதல் அடி எடுத்துத் தந்தவன் கிருஷ்ணன்.
சமபாவனை பற்றி இன்னொரு சுலோகத்தில் பேசும்போது கிருஷ்ணன் சொல்கிறான்- பசு, படித்த பண்டிதர், பிராமணர், பாவி, சண்டாளன், நாய், பன்றி இவை யாவற்றையும் சமபாவனை கொண்டு, மனதில் ஏற்றத்தாழ்வு எதுவும் எழாதபடி, ஒரே சமநோக்கில் பார்ப்பவன் எவனோ அவனே உண்மையான யோகி.
சாதி மதம் இவற்றை கடந்து மட்டுமல்லாமல் உயர்திணை, அஃறிணை இவற்றிற்கும் அப்பாற்பட்டு உயிர்களை அவை ஆன்மா என்று மட்டும் கருதி கருணை கொள்ளச் சொல்கிறான் கிருஷ்ணன். முதல் சமூக சீர்திருத்தவாதியும் கிருஷ்ணனே.
அடுத்ததாக ஆஷாடபூதிகளை எதிர்ப்பவனாக கிருஷ்ணன் இருப்பதை கீதையின் சுலோகம் வழியே நாம் தெரிந்து கொள்ள முடியும். ஆஷாடபூதிகள் என்பவர் யார்?
பக்தன்போல வேடமிட்டுக் கொண்டும், ஆன்மிகக் காரியங்களை செய்பவன்போல நடித்துக் கொண்டும் ரகசியமாக பல தவறுகளை செய்பவன் ஆஷாடபூதி. கீதையின் இரண்டாம் அத்யாயமாகிய ஸாங்க்ய யோகத்தில் ஓரிடத்தில் இந்த ஆஷாடபூதிகளுக்கு எதிராக கிருஷ்ணன் பேசுகிறான். தற்போதைய காலத்தில் ஆஷாடபூதிகள் என்பவர்கள் வேறு யாருமல்லர் – பெண்கள் கேசில் சிக்கி சிறைக்குப் போன மடாதிபதிகளும், போலிச் சாமியார்களும், ரகசியமாக ஆனந்தங்களை அனுபவித்து கேமிரா கண்ணிகளில் அகப்பட்டுக் கொண்ட இன்னும் பிற ஆஷாடபூதிகள்தான்!



கீதையின் விபூதியோகத்தில் தான் எந்தெந்த ரூபங்களில் இருப்பதாக கிருஷ்ணன் சொல்லிச் செல்கிறான். ஆயுதந்தரித்த ராமனாகவும், இனிய வசந்தகாலமாகவும், பனிபொழியும் மார்கழி மாதமாகவும், பூமாதேவியாகவும், ஸ்ரீதேவியாகவும், துர்க்கையாகவும், அம்பிகையாகவும் தானே வெவ்வேறு ரூபமெடுத்து திகழ்வதாகச் சொல்வதோடு மேலும் கிருஷ்ணன் தான் என்னென்ன விதமாய் பிரபஞ்ச இயக்கத்தில் இருப்பதாகச் சொல்லிச் செல்வதை ஒருவர் கீதையைப் படிக்கும்பொழுது மெய்சிலிர்ப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும்.
‘ஏமாற்றும் வஞ்சகமான சூது எனும் விளையாட்டாகவும் நான் இருக்கிறேன்’ என்கிறான் கிருஷ்ணன்.
உயிரை எடுக்கும் எமனாகவும் நானே இருக்கிறேன்’ என்றும் சொல்கிறான் அவன். 


‘ஜீவராசிகளிடம் காம உணர்வைத் தூண்டும் மன்மத ரதியாகவும் நானே செயலாற்றுகிறேன்’ என்றும்கூட சொல்கிறான். 

மேலும் படிக்க கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்.



பல சுவாரசியமான செய்திகளுக்கு கீழே உள்ள தல முகவரிக்கு செல்லவும்.

http://www.natpu.in



ரஜினியின் (நறுக்) செய்தி...!!!!




ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகர இட நெருக்கடி காரணமாக ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் - ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விடுத்த அறிக்கையில்.


'' எத்தனையோ முறை கழகத்தலைவர்களுடன் கூட்டங்களில் கலந்த அனுபவம் இருந்தும் அந்தச் சாயல் கொஞ்சங்கூட உங்க அறிக்கையில் தெரியலையே. அவங்கன்னா உங்களை மாதிரி இடமில்லைன்னு வருத்தப்படாம இதயத்தில் இடம் கொடுத்திருக்கேன்னு சந்தோசத்தோட சொல்லியிருப்பாங்களே..''



மேலும் சுவரசியமான செய்திகளுக்கு: 






Thursday, September 2, 2010

இரு கரைகளாலும் கைவிடப்பட்ட திருநங்கை வித்யா....!!!



படைப்பின் ஒழுங்கில் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட சிறு பிசகலால் திரிந்த பால்பேத சிக்கலகளுக்குப் பொறுப்பு இவர்களல்ல. மீளும் கதியற்று வாழ்க்கை நதியின் சுழிகளில் சிக்கித் திணறும் இவர்களைப் பார்த்து கைவிட்ட கரைகள் இரண்டும் கைகொட்டி சிரிப்பவைகளாகின்றன.
திருநங்கை வித்யா தனது சுயமான பால் அடையாளத்தை மீட்க மேற்கொண்ட போராட்டங்களை இந்நேர்காணல் வழியாக உங்களிடம் சொல்கிறார்:
உங்கள் குடும்பச் சூழல் பற்றி சொல்லுங்கள்...
வித்யா: திருச்சி மாவட்டம் புத்தூர் அருகில் உய்யக் கொண்டான் புறநகர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்தேன். சின்னவயதில் என்னுடைய பெயர் சரவணன். எனக்கு அப்பா இருக்காங்க. ஆனால் அம்மா சிறுவயதாக இருக்கும்போதே இறந்து விட்டாங்க. நான் எனது அக்கா அரவணைப்பில் இருந்தேன். மிகவும் வறுமையில் வாடிய சூழலிலும் என் அப்பா வட்டிக்கு வாங்கி என்னை எம்.ஏ., (பட்டய மொழி) படிக்க வைத்தார். சிறுவயது முதலே அக்காவின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய அனைத்தையும் பயன்படுத்த விருப்பம் ஏற்பட்டது. பல முறை இதற்காக அடியும் கூட வாங்கியிருக்கிறேன். அப்படி இருந்தும மீண்டும் எனக்குள் பெண்மைத் தன்மைதான் இருந்தது. 

ஒரு முழுமையான பெண்ணாக மாறவேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது? 







மேலும் படிக்க கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்:


http://www.natpu.in/Pakudhikal/Nam%20Samookam/vidya.php


தவறாமல் உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும். 

Wednesday, September 1, 2010

நடிகர் கட்சி எந்தப்பக்கம்? - நட்பூ

         தேர்தல் நெருங்க நெருங்க நடிகர் கட்சியை நோக்கிப் பலருடைய கவனமும் திரும்பி இருக்கிறது. தொடர்ந்து கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதில் உள்ள பிரச்சினைகளையும், பொருளாதாரச் சிக்கல்களையும் கட்சியில் உள்ள பலரும் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரசுடனும் இன்னும் இதரக் கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணியாகப்போட்டியிடலாமா என்கிற யோசனைகள் எல்லாம் முன்வைக்கப்பட்டாலும் - தன்னைப் பெரிதும் முன்னிலைப்படுத்தி நடிகர் கட்சியினர் பேசுவது சற்று அலர்ஜியை உண்டு பண்ணியிருக்கிறது.

அப்படி காங்கிரசுடன் இணைந்த கூட்டணி அமைந்தால் தைலம் மணக்கும் தோட்டத்துக்காரரும் தயாராக இருக்கிறாராம். இருந்தும் டெல்லித் தலைமையிடமிருந்து அதற்கான சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. சென்னையில் உள்ள தோட்டத்துத்தலைமையும் 1967ல் தி.மு.க ராஜாஜி மாதிரி மாறுபட்ட பல கட்சித்தலைவர்களுடன் இணைந்து கூட்டணியை வலுப்படுத்தியதைப் போல இப்போது அமைக்க வேண்டும் என்று நினைக்கிறதாம். அதற்காக வழக்கமான இறுக்கத்தை விட்டு இறங்கி வரவும் தயாராக இருக்கிறார்களாம். நடிகரை கூட்டணிக்குள் கொண்டுவர அந்தக்கூட்டணியில் உள்ள சிலர் வெளிப்படையாக விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். எப்படியோ தி.மு.க வை ஆட்சியை விட்டு இறக்கியே தீருவேன் என்று சபதம் போடாத குறையாக அறிவித்திருந்தாலும் - தி.மு.கவுக்கு எதிரான எந்த அணியில் சேரப் போகிறார் என்பது இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை. ஆனால் அவருக்குப் பக்கத்தில் தூண்டில்கள் தயாராக இருக்கின்றன.

மேலும் சுவரசியமான செய்திகளுக்கு: