Saturday, October 30, 2010

கர்ப்பப்பையை அகற்றிவிட்டு....

கர்ப்பப்பையை அகற்றிவிட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பெண்கள்


natpu

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையச் சோதனையின்போது பிடிபட்டிருக்கிறார்கள் 30 பெண்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள். 
இவர்களுடைய பாஸ்போர்ட்கள் ஒரிஜினல் என்றாலும் அதிலிருந்த சில முத்திரைகளைச் சோதித்தபோது அந்த முத்திரைகள் போலியென்று தெரிய வந்ததும் கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டை சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். 
தமிழகம், கேரளம், ஆந்திரா மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் இதில் அடக்கம். 
வீட்டு வேலைகளுக்காக இவர்கள் வளைகுடா நாடான ஓமனுக்குக் கிளம்புவதற்கு முன்பு பிடிபட்டிருக்கிறார்கள். இதையொட்டி இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகச் சில ஏஜெண்டுகளைக் கைது செய்திருக்கிறார்கள் போலீசார். 
இது ஏதோ ஒரு நாளில் மட்டும் தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல. இதன் பின்னால்தான் எவ்வளவு அதிர்ச்சியூட்டும் பின்னணி?
மீபத்தில் தென்னிந்தியாவிலிருந்து இளம்பெண்கள் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அங்கு வீடுகளில் வேலைகளுக்குப் போவதாகச் சொன்னாலும் பெரும்பாலானவர்கள் அங்கு போனதும் பாலியல் தொழிலில் பலவந்தமாக ...


natpu

மேலும் படிக்க: 

நன்றி - நட்பூ (www.natpu.in)


Wednesday, October 27, 2010

எது தமிழ்ப்படம்? ஒச்சாயி - திரைப்படமும் சர்ச்சையும்

எது தமிழ்ப்படம்?


natpu

ருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு மதுரை சுற்றுப் புறத்தை மையமாக வைத்துப் பலவிதமான படங்கள் வர ஆரம்பித்துவிட்டன. செழுமையான கதை உயிர்ப்போடு இல்லாமல் அந்தப் பிராந்தியத்தை மட்டும் திரைப்பட நகல் எடுக்கும்போது அவை எடுபடாமல் போய்விடுகின்றன.
இந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் - ஒச்சாயி.
ஒச்சாயி. மதுரையில் உசிலம்பட்டி வட்டாரத்துக்கே உரித்தான ஒரு தமிழ்ச்சொல். மதுரைக்கு பக்கத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள பாப்பாபட்டியில் இருக்கிற ஒச்சாண்டம்மன் கோவில் கருமாத்தூரிலும் இருக்கிறது. முக்குலத்தோருக்குச் சொந்தமான இந்தக் கோவிலில் இருக்கும் ஒச்சாண்டம்மனையும், ஆச்சிக்கிழவியையும் அந்தச் சமூகத்து மக்கள் தங்கள் முன்னோர்களாக வணங்குகிறார்கள். இப்போதும் அங்கு 'ஒச்சாயி' என்கிற பெயர் பல பெண்களுக்கு வைக்கப்பட்டிருப்பதை இந்தப் பகுதிக்குப் போனவர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.
ரத்த மரபணுக்கள் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பல்லாண்டுகளாக மற்ற இனங்களோடு திருமண உறவு செய்துகொள்ளாமல்

மேலும் படிக்க: 

நன்றி - நட்பூ (www.natpu.in)

Tuesday, October 26, 2010

ஒச்சாயி - சினிமா விமர்சனம்



ஒச்சாயி


natpu




ராஜேஷ் முதல் மனைவி ஒரு மகனைப் பெற்றுவிட்டு இறந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்கிறார். மகன்  மொக்கைச்சாமி வளர்ந்த நிலையில் இருக்கும்போது, அந்த மனைவி வேறு ஒருவருடன் தொடர்பாக இருப்பதைப் பார்த்துவிடும் ராஜேஷ் அந்த இடத்தில் அவர்களைக் கொலை செய்துவிட்டுச் சிறைக்குப் போகிறார். அவருடைய மகன் தனித்து விடப்பட்டு தாதா ஒருவரால் வளர்க்கப்படுகிறான். சகல பழக்கங்களும் அவனுடன் வளர்கின்றன.
சிறையில் இருந்து விடுதலை ஆகி ஊருக்கு வரும் ராஜேஷுக்கு தன் மகன் வளர்ந்து நிற்கும் விதத்தைப் பார்த்து அதிர்ச்சி. அவரைத் தொடர்ந்து இம்சிக்கும் மகனை அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. குடி, கொலை, தாக்குதல் என்று அலையும் மகன், பெண்கள் மீதே வெறுப்புடன் இருக்கிறான். பெண்கள் குறித்துக் கேவலமாகப்..




natpu




மேலும் படிக்க: http://cinema.natpu.in/thiraippadam/vimarsanam/oochaye.php

Monday, October 25, 2010

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக் கட்டணங்களை நிர்ணயிப்பவர் யார்? தடுப்பவர் யார்?


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக் கட்டணங்களை ..



natpu

மிழகத்தில் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தைச் சேர்ந்த பல பெற்றோர்களுக்கு உருவாகியிருக்கும் குழப்பம் - தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண விஷயத்தில் தமிழக அரசு என்னதான் நினைக்கிறது? இந்தக் குழப்பத்தின் உச்சக்கட்டமாக தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழுத் தலைவரான நீதிபதி கோவிந்தராஜன் தன்னுடைய பதவியை விட்டு விலகியிருக்கிறார்.
விலகலுக்கான காரணம் என்ன?
தமிழகத்தில் முன்பு கிறிஸ்தவ நிறுவனங்கள் நடத்திய பள்ளிகள் பரவலாக இருந்தன. நல்ல வசதி படைத்தவர்கள் கல்வியைப் பரப்பும் நோக்கத்தில் எழுப்பிய பள்ளிகளும், கல்லூரிகளும், சில பல்கலைக்கழகங்களும் கூட இருந்தன. இவற்றில் படித்து முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகம். மாநகராட்சிப் பள்ளிகளின் தரமும் குறையாமல்தான் இருந்தன.
ஆனால் எண்பதுகளுக்குப் பிறகு அரசுப் பொதுமருத்துவமனைகள் இயங்குவதைப் போல 

மேலும் படிக்க: http://www.natpu.in/Pakudhikal/Mukappukkatturai/palli.php

நன்றி - நட்பூ (www.natpu.in)

Sunday, October 24, 2010

பீகார் தேர்தலில் போட்டியிடும் 219 கிரிமினல்கள்







பீகாரில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் 219 பேர் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. இதில் 129 பேர் மீது கொலை மற்றும் 


மேலும் படிக்க: http://www.natpu.in/Pakudhikal/Seydhikal/article9.php


Saturday, October 23, 2010

தி.மு.க விடம் ஏற்பட்டிருக்கும் பதற்றங்கள் : காரணம் என்ன?

தி.மு.க - வின் பதற்றம் : காரணம் என்ன?



natpu


மீபத்தில் மாவட்டவாரியாகத் தன் கட்சியினரைச் சந்தித்துவரும் தி.மு.க தலைவரான கருணாநிதியின் பேச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை தமிழக அரசியலை இயல்பாகக் கவனித்து வரும் யாரும் உணர்ந்துகொள்ள முடியும். அதில் அவர் தொடர்ந்து வலியுறுத்தும் விஷயம் - உள்கட்சி ஒற்றுமை. அப்படியொரு ஒற்றுமை இருந்தால் ஆயிரம் அ.தி.மு.க.க்கள் வந்தாலும் தி.மு.க வை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் சொல்லவேண்டிய அவசியம் என்ன?
தன்னைக் குறைத்து மதிப்பிட்டு சர்வே ஒன்று ஒரு நாளிதழில் வெளிவந்ததற்காக அந்த நிறுவனம் பட்டபாடு தமிழகத்திற்குத் தெரிந்த ஒன்றுதான். உட்கட்சிப் பிரச்சினை எந்தெந்த விதங்களில் எல்லாம் தி.மு.க வில் வெடித்திருக்கிறது என்பதும் பலருக்கும் தெரியும். தி.மு.க வில் இருக்கும் மோதல்கள் குறித்த பத்திரிகைச் செய்திகள்

natpu


மேலும் படிக்க: http://natpu.in/Pakudhikal/Mukappukkatturai/dmk.php

நன்றி - நட்பூ (www.natpu.in)



Thursday, October 14, 2010

முறுக்கு மீசையும் ; வீச்சரிவாளும்...


அய்யனார்...




natpu
முறுக்கு மீசையும் ; வீச்சரிவாளும்....
ட்ட மலை அய்யனாரே மாவூத்து வேலவரே…  மழையை இறக்கிவிடு…  மானுடங்க கையெடுக்க…’’
- அய்யனாரைப் பற்றிய ஒரு நாட்டுப்புறப் பாடல். ரொம்பவும் விழிப்பான கண்கள்;  ஏறின புருவங்கள்;  மேடான கன்னத் தசையில் துருத்திக் கொண்டிருக்கும் அடர்த்தியான மீசை; தடித்த உதடுகளுடன் துடிப்பான சாமியாக வெட்ட வெளியில் நிற்கிறார் அய்யனார்.
வலது கையில் நீளமான செண்டு;  இடது கையில் ஒரு மந்திரக்கோல். பக்கத்திலேயே காவல் தெய்வங்களான முத்துக் கருப்பு; வேட்டைக் கருப்பு.
சற்றுத் தள்ளி பல அழுத்தமான வர்ணங்கள் மினுங்குகிற குதிரைகள்; யானை. இப்படித்தான் காட்சியளிக்கிறது கோவில். இருப்பது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரை அடுத்துள்ள எஸ். கோவில்பட்டி கிராமத்தில். பொதுவாக தென் தமிழகத்தில் பல இடங்களில் அய்யனார் கோவில் இருந்தாலும் இங்கே மட்டும் தனிவிசேஷம்.


natpu


கொஞ்சம் வானம் பார்த்த பூமியாகக் கிடக்கிற கோவில்பட்டியில் சில தலைமுறைகளுக்கு முன்பு ஒரு சம்பவம்...
வறண்ட காலத்தில் கடப்பாரை கொண்டு வள்ளிக்கிழங்கு தோண்டப் போவது பலருக்கு வழக்கம். அப்படி ஒரு சமயம் தோண்டியபோது மண்ணைப் புரட்டியதும் ‘ணங்’ என்று கனமான சத்தம்.


மேலும் படிக்க: 
http://www.natpu.in/Pakudhikal/Aanmeekam/ayyanar.php

Monday, October 11, 2010

ஆண்மை தவறேல்...!!!





ஆண்மை தவறேல்...!!!







இந்த வரியை நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நடைமுறையில் இந்தக் கேரக்டரைப் பார்த்திருக்கிறோமா? சந்தேகம்தான்.




வாங்க பாப்போம்.... : 
http://cinema.natpu.in/thiraippadam/cinebits/ramachandran.php


நன்றி..!

Sunday, October 10, 2010

நறுக் செய்தி...!



விஜயகாந்த் பெயரில் மோசடி செய்த மூன்று பெண்கள் கைது  - செய்தி







  
''கேப்டனுக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தையைப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருந்தும் தாய்க்குலம் இப்படிச் செஞ்சிருக்கீங்களே? அவர் லேசில் மன்னிப்பாரா? சொல்லுங்க.''




மேலும் படிக்க: www.natpu.in

Saturday, October 9, 2010

அயலகத் தமிழர்களா...? - அப்ப வாங்க சந்திப்போம்....!

அயலகத் தமிழர்கள் சங்கமிக்கும் நட்பூ - வின் தளம். 

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு, ஓர் நற்செய்தி... ஆம்...





வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கென நம் நட்பூ (natpu.in) தளத்தில், புதிதாக
" அயலகத் தமிழர்கள் " என்று புதிய பகுதி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த பகுதியில், நீங்கள் வசிக்கும் நாட்டில் நடக்கும், தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றிய செய்திகளையும், கலை, இலக்கியம், நூல் வெளியீட்டு விழா, மற்றும் இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை நீங்கள் சேகரித்து அனுப்பினால் அது நட்பூ தளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

பக்கத்தை பார்க்க: 
http://www.natpu.in/natpu/Pakudhikal/AyyalagaThamizhargal/

நன்றி...!

www.natpu.in