Sunday, November 7, 2010

உத்தம புத்திரன் - சினிமா விமர்சனம்




natpu


தெலுங்கிலிருந்து வந்திருக்கும் இன்னொரு இறக்குமதிச் சரக்கு. ஏற்கனவே 'சுப்பிரமணியம்' படத்தில் பார்த்த மாதிரி கூட்டுக்குடும்பம். அதில் வரும் ஜெனிலியா தான் இதிலும் . துவக்கக் காட்சியில் வந்துபோகிறார் ஸ்ரேயா. தனுஷ் நண்பனுக்காக திருமண மண்டபத்தில் பெண்ணைக் கடத்தப் போய் மாற்றி வெறொரு பெண்ணான ஜெனிலியாவைக்கடத்திவருகிறார். வழக்கம்போல ஒரு கும்பல் துரத்துகிறது.
இருவரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். தன்னுடைய வீட்டிற்கே ஜெனிலியாவை அனுப்பி வைக்க - அங்கு அவர் நல்லபெயர் எடுக்கிறார் .தனுஷீக்குத் திருமணம் முடிக்க அந்தப்பெரிய குடும்பத்தில் முடிவெடுக்கும்போது ஜெனிலியாவைக் கடத்துகிறார்கள் அவருடைய உறவினர்கள். குடுமி(!) வைத்த முரட்டுக்குடும்பத்தில் நுழைந்து விவேக்கைப் பயன்படுத்தி தன்னுடைய குடும்பத்தினரை வெளிநாட்டிலிருந்து வருபவர்களாக நடிக்க வைத்து (சகலகலாவல்லவன் காலத்துத்துருப்பிடித்த உத்தி!) அவர்களை ஏமாற்றி தங்களுடைய திருமணத்தை முடித்து பிரிந்துகிடந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்குள் - எப்போது படம் முடியும்..


natpu


மேலும் படிக்க:  

நன்றி - நட்பூ (www.natpu.in)

No comments:

Post a Comment